மோடியுடன் பிரியங்கா, ராகுலை ஒப்பிட முடியாது: இராகுல் காந்தி இனிமேல்தான் வளர வேண்டும்: பிரபல சாம்னா பத்திரிகை கருத்து

மோடியுடன் பிரியங்கா, ராகுலை ஒப்பிட முடியாது: இராகுல் காந்தி இனிமேல்தான் வளர வேண்டும்: பிரபல சாம்னா பத்திரிகை கருத்து

Update: 2019-02-21 04:49 GMT

காங்கிரஸ் தலைவர், ராகுல், அவருடைய சகோதரி, பிரியங்கா வாத்ரா ஆகியோர், பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஈடாக முடியாது; அவருடன், அவர்களை ஒப்பிடவே கூடாது' என, சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னா கூறியுள்ளது.


விரைவில் நடக்க உள்ள, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக, பா.ஜ., மற்றும் அதன் நீண்ட கால கூட்டணி கட்சியான, சிவசேனா சமீபத்தில் அறிவித்தன.  கடந்த சில ஆண்டுகளாக, பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து,  சிவசேனா பத்திரிகையான, 'சாம்னா'வில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.


இந்த நிலையில், நேற்று வெளியான, சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாவது:


கடந்த, 2014ல் நடந்த லோக் சபா தேர்தலுக்குப் பின், காங்., தலைவர், ராகுலின் தலைமைப் பண்பில், சில முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.அவருடைய சகோதரி,பிரியங்காவும் அவருக்கு உதவியாக உள்ளார். ஆனால், எந்த காலத்திலும்,இவர்கள் இருவரும்,பிரதமர் மோடிக்கு ஈடாக முடியாது. மோடியுடன், இவர்களை ஒப்பிடவே கூடாது.


பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளது குறித்து,சிலர் விமர்சித்து வருகின்றனர். எங்களுடைய கூட்டணி, அவர்களை பூச்சிகளைப் போல் நசுக்கி விடும் என்ற பயத்தில், இவ்வாறு விமர்சிக்கின்றனர்.பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே, சில கசப்புணர்வு ஏற்பட்டது. 


மகா., மாநிலத்தின் நலன் கருதி, இருவரும் மீண்டும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்.


கொள்கை ரீதியில் எதிர் எதிர் திசையில் உள்ளவர்கள் இணைந்து, மெகா கூட்டணியை உருவாக்க முயன்றுள்ளனர். பா.ஜ.,வுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எந்த பகைமையும் இல்லை; நாங்கள் இணைவதில் தவறில்லை. 


கடந்த, லோக்சபா தேர்தலின் போது, காங்.,க்கு எதிராக, மோடிக்கு ஆதரவான அலை வீசியது; தற்போது, அதுபோன்ற எதிர்ப்பு அலை ஏதும் இல்லை. கொள்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் அடிப்படையிலேயே, வரும் தேர்தலை சந்திக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Similar News