வளமான வாழ்க்கைக்கு புனித துறவி வித்யாசாகர் கொள்கைகள் மூலம் மோடியின் கவரும் கருத்துக்கள்!
புனித துறவி சிரோமணி ஆச்சரிய ஸ்ரீ 108 வித்யாசாகர் மகாராஜ் அண்மையில் சமாதி அடைந்த நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள சடல்காவில் கன்னடம் பேசும் ஜெயின் குடும்பத்தில் 1946-ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி முழு நிலவு விழாவின்போது அவர் பிறந்தார். வித்யாசாகர் கடந்த 1968 ஆம் ஆண்டு அஜ்மீரில் உள்ள ஆச்சாரியா சாந்தி சாகர் மகாராஜன் பரம்பரையைச் சேர்ந்த ஆச்சார்ய ஞானசாகர் மகாராஜா என்பவரால் 22 வயதில் திகம்பர துறவியாக தீட்சை பெற்றார். அவர் பிறந்த வீடு இப்போது கோவிலாகவும் அருங்காட்சியமாகவும் உள்ளது.
கடந்த 18-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர் சந்திரகிரி தீர்த்தத்தில் தனது 77 வது வயதில் வித்தியாசாகர் சமாதியானார்.ஆழ்ந்த ஞானம், எல்லையற்ற இரக்கம் மற்றும் மனித குலத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது அவரது வளமான ஆன்மீக வாழ்க்கை அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் அவரது ஆசீர்வாதங்களை பெரும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டியாக இருந்த அவரது இழப்பை மிகப்பெரிய இழப்பாக நான் உணர்கிறேன்.
வித்யாசாகர் ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவர் ஒரு உண்மையான தவசீலராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கை பகவான் மகாவீரரின் கொள்கைகளை கொண்டதாக இருந்தது. அவரது வாழ்வு சமண சமயத்தின் முக்கிய கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. சமண சமயத்தால் மகாவீரரின் கொள்கையால் உலகம் தொடர்ந்த உத்வேகம் பெற்று வருவதற்கு இவரை போன்ற மாபெரும் துறவிகளை காரணம். அவர் சமண சமூகத்தில் உயர்ந்து நின்றார் .ஆனால் அவரது தாக்கமும் செல்வாக்கும் ஒரு சமூகத்திற்கு மட்டும் அடங்கிவிடவில்லை. அவரது போதனைகள் உண்மையான ஞானத்திற்கான பாதைகளாக அமைந்துள்ளன .