ஏ.ஐ தொழில்நுட்ப ஜாலத்தின் மூலம் மோடியின் உரை ஏழு மொழிகளில் வெளியீடு!

ஏ.ஐ தொழில்நுட்ப வசதியின் மூலம் மோடியின் உரை ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-07 15:26 GMT

கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் உரை செயற்கை நுண்ணறிவு மூலம் நேரலையில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.


தற்போது மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். அவர் சுற்றுப்பயணம் செய்யும் மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வகையான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறைவேற்றி நாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்.புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.


இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்  அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Source :maalainilavu

 


Similar News