இந்துமதத்தின் நமஸ்காரம்: ஒளிந்திருக்கும் ஆழமான அறிவியல் உண்மைகள்!
இந்து மதத்தில் கடவுள்களை வணங்கும் நமஸ்காரத்திற்கு பின்னணியில் இருக்கும் ஆழமான அறிவியல் உண்மை.
பொதுவாக இந்து கோவில்களில் நாம் சென்ற உடனே இரு கைகளையும் குவித்து வணங்கி, கடவுளை முழுமனதுடன் வணங்குகிறோம். பொதுவாக இது ஒரு யோகாசன நிலை யாகும். இதில் பல்வேறு அறிவியல் பூர்வமான உண்மைகளும் பின்னணியில் உள்ளன. நமஸ்தே என்பதன் ஆன்மீக அர்த்தம் ஆழமானது. குறிப்பாக இந்து மதத்தில், கடவுள்கள் கண்களை மூடி, பயபக்தியுடன் உள்ளங்கைகளைச் சேர்த்து வணங்குகிறார்கள். இது அவர்களின் தெய்வீகத்தை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. நமஸ்கர் தோரணையில், இணைந்த விரல்கள் ஒரு ஆன்டெனாவாக செயல்படுகின்றன.
நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு அற்புத பயிற்சி நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று கூறப்படும் பயிற்சி. நாம் இயற்கையை விட்டு விலகி இருக்கும் இந்த நவீன காலத்தில் சூரிய நமஸ்காரம் நமது உடல்,மனம் போன்றவற்றினை நன்கு செலுமைப்படுத்த சூரிய நமஸ்காரம் உதவுகிறது. சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம். ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது தவறு.
மேலும் இது செய்வதன் மூலம் இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கி கசக்கிப் பிடித்து விடுவது போன்று மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடுகிறது. நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
Input & Image courtesy: Vedic Gyaan India