UIDAI-ன் புதிய அறிவிப்பு: மாஸ்க்டு ஆதார் கார்டு என்பது எதைக் குறிக்கிறது?
மாஸ்க்டு ஆதார் கார்டு பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டது என்று UIDAI-ன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும். மேலும் தற்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பல்வேறு சமயங்களில் ஆதார் அட்டையில் உள்ள நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது எனவே இந்த மோசடிகளை தவிர்ப்பதற்காக தற்பொழுது அதிகாரப்பூர்வமான அமைப்பான UIDAI அனைத்து மக்களையும் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த அட்டையில் உங்களது 12 இலக்க ஆதார் எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களைப் பற்றிய தனித் தகவல்கள் எதுவுமே அதில் இடம்பெறாது.
நீங்கள் டவுன்லோடு செய்து வைத்துள்ள ஆதார் நம்பரில் நீங்கள் மாஸ்க் செய்து கொள்வதற்கான ஆப்சன் அளிக்கப்படுகிறது. அதாவது உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8 நம்பர்கள் XXX என்று இருக்கும். எஞ்சியுள்ள 4 இலக்கம் மட்டுமே தெரியும்படி இருக்கும். ஏனென்றால் இங்கு முழுமையான ஆதார் எண் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த கார்டில் உங்கள் ஆதார் அடையாளத்தின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
Input & Image courtesy: News 18