தை கிருத்திகை: முருகன் அறுபடை வீடுகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
தை கிருத்திகை ஒட்டி அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் முருகன் அறுபடை வீடுகளில் தரிசனம்.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் போன்ற முருகப்பெருமானின் பல்வேறு சிறப்பு பெற்ற கோவில்களில் பக்தர்கள் தற்பொழுது திரளாக சென்று தரிசனம் செய்து இருக்கிறார்கள். இந்த கோவில்களுக்கு தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் தை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலை ஏராளமான பக்தர்கள் கூட்டமாக சுவாமி தரிசனம் செய்தார்கள். குறிப்பாக இன்று அதிகாலை மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் பொருட்களால் அலங்காரம் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபா தரணிகள் நடைபெற்றது. திறனான பக்தர்கள் மீண்டும் வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தார்கள். ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, அலகு குத்தி கடனை செலுத்தினார்கள்.
Input & Image courtesy: Maalaimalar