கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்காரம் - முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

கந்த சஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரவசம்காரத்தில் கலந்து கொள்ள முருகன் கோவிலை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்.

Update: 2022-10-30 02:58 GMT

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. அனைத்தும் முருகனின் அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முருக பக்தர்கள் அனைவரும் முருகன் கோவிலை நோக்கி படையெடுக்கும் நிகழ்வான சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெறும்.


அந்த வகையில் தினமும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியில் சூரசம்காரம் காலை 6:30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடை சூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூர பத்மனி வதம் செய்யக்கூடிய சூரசம்கார லீலை நடைபெறும்.


திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான இன்று காலை 7:15 மணியளவில் சுற்றி சட்ட தேர் வலம் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் காலை 5:30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 31ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றார்கள் மற்றும் முருகன் கோவில்களிலும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News