முன்னாள் பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் ! சந்திரசேகரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி அறிவிப்பு!!

முன்னாள் பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் ! சந்திரசேகரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி அறிவிப்பு!!

Update: 2019-07-25 09:16 GMT


நாட்டுக்காக பணியாற்றிய அனைத்து முன்னாள் பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளர். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்து மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் எழுதி உள்ள புத்தகத்தை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி வெளியிட்டார். இதனை குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பெற்றுக் கொண்டார். புத்தகத்தை வெளியிட்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, கலாச்சாரம் மற்றும் கொள்கை பிடிப்புள்ளவராக சந்திரசேகர் வாழ்ந்தார் என்றார். மறைந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சந்திரசேகரின் கொள்கைகள் வழிநடத்த உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.


விவசாயிகள், ஏழைகள் நலன் காக்க சந்திரசேகர் மேற்கொண்ட பாதயாத்திரையை நினைவு கூர்ந்த மோடி, இதுபோன்ற தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றார்.


இந்த குறைபாட்டை போக்கும் வகையில் முன்னாள் பிரதமர்கள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த அருங்காட்சியகம் அமைய முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமென மோடி கேட்டுக் கொண்டார்.


Similar News