மசூதியில் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்ததால் இந்து குடும்பம் மீது தாக்குதல் !
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். சிந்து மாகாணத்தில் மட்டும் அதிகளவிலான இந்து மக்கள் வசித்து வருகின்றனர். முஸ்லீம் நாட்டு மக்களுடன் இணைந்து இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.;
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் குடிநீர் எடுத்து வந்த இந்து குடும்பத்தினரை அப்பகுதியை சேர்ந்தவர் அடித்து துன்புறுத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். சிந்து மாகாணத்தில் மட்டும் அதிகளவிலான இந்து மக்கள் வசித்து வருகின்றனர். முஸ்லீம் நாட்டு மக்களுடன் இணைந்து இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் ரஹீம்யார் கான் நகரில் ஆலம் ராம் பீல் என்ற குடும்பம் வசித்து வருகின்றது. இவர்கள் பல ஆண்டுகளாக விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். சமீபகாலமாக வீட்டின் அருகாமையில் உள்ள மசூதியின் குழாயில் இருந்து குடிநீர் பிடித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் ஆலம் ராமின் குடும்பத்தினரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆலம் ராம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் உறவினர் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் என்பதால் போலீசார் புகாரை பதிவு செய்யாமல் உள்ளதை தொடர்ந்து ஆலம் ராம் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தினார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar