அகண்ட பாரதம் மறுபடியும் வேண்டும் எனக் கோரும் இஸ்லாமிய அமைப்பு !

Update: 2021-12-04 09:24 GMT

அகில இந்திய தன்சீம் உலமா ஈ இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பு, முஸ்லிம்களின் ஒரு பிரிவான 'பரெல்வி' பிரிவிற்கு தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு என்று கூறிக் கொள்கிறது. இவ்வமைப்பு அகண்ட பாரதம் (அதாவது பிரிக்கப்படாத இந்தியா) என்ற ஒரு இயக்கத்தை தொடங்கப் போவதாக கூறி உள்ளது. 

இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததுபோல இந்தியாவின் புவியியல் அமைப்புகள் மாறவேண்டும் என்பதை குறிப்பதாகும். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா சகாபுதீன் ரஸ்மி இதுகுறித்து கூறுகையில், பிரிவினைக்கு முன்பு இருந்ததை போல பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை இணைத்து இந்தியா அகண்ட பாரத அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இவ் அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்கிறது அதன் பொதுச்செயலாளர் தற்போது பரேலியில் வசித்து வருகிறார். அவர் மேலும் கூறும்போது, ஜெர்மனி ஒன்றுபடும் பொழுது, பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற ஒரே கலாச்சாரம் கொண்ட பாரதத்தை இணைக்க முடியாதா என்று கேட்கிறார்.

இது இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும் என்றும் தெரிவிக்கிறார் .1947இல் இந்தியா பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானது. 1971இல் வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்கப்பட்டு 3 தனி நாடுகளை உருவாக்குகிறது.

இதே கோட்பாட்டினை பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புடன் உடன் சேர்ந்து வேலை செய்வதாக தான் நினைக்கிறாரா என்று அவரிடம் கேட்ட பொழுது, ஆர்.எஸ்.எஸ் அப்படி ஒரு இயக்கத்தை நடத்தி இருக்கிறதா என்று தனக்கு தெரியாது என்றும் இந்த நல்ல காரியத்திற்காக எந்த அமைப்புடனும் தாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நவம்பர் 26ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூறுகையில், பிரிவினையின்போது நம் நாடு பெரும் தடைகளை சந்தித்ததாகவும் அவைகளை மறக்க கூடாது என்றும் மறுபடியும் அதுபோல நடக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ஒரு முறை நாடு பிரிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் அது போன்று நடக்கக்கூடாது என்றும் கூறினார்.

மேலும் அகண்ட பாரதத்தை அகண்ட பாரதம் வேண்டும் என அவர் வாதிட்டார். பிரிவினை மறக்கக்கூடாது ஒரு நிகழ்வு எனவும் பிரிவினை மீண்டும் முடிவுக்கு வந்தால் தான் அதன் வலி தீரும் என்றும் தெரிவித்தார். பிரிவினை, அமைதிக்காக நடந்தது என்றும் ஆனால் அதன் பிறகும் நாட்டில் தொடர்ந்து கலவரங்கள் உருவானதாகவும் கூறினார். பாரதத்தின் அடையாளம் இந்து எனவும் அதை ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.  

Tags:    

Similar News