மலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் - களத்தில் இறங்கிய பா.ஜ.க
நாகர்கோவில் மலைப்பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கிறிஸ்துவ ஆலயம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்.
கிறிஸ்தவ ஆலயங்களை கட்டுவதற்கு பல்வேறு நபர்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த அதில் தேவாலயங்களை கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதிலும் ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதிகளில் ஆக்ரமிப்பு சம்பவங்கள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது நாகர்கோவலில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு கிறிஸ்து தேவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
நாகா்கோவில் மேலப்பெருவிளை பன்றிவாய்க்கால் பொத்தையில் உள்ள மலைப்பகுதி இடத்தை வழிபாட்டுத்தலம் கட்ட தாரை வாா்க்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பா.ஜ.க. சாா்பில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு தரப்பிலிருந்து நபர்களும் கலந்து கொண்டார்கள்.
குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். எம்.ஆா்.காந்தி MLA., மாவட்ட பா.ஜ.க. தலைவா் தா்மராஜ், முன்னாள் மாவட்ட தலைவா்கள் முத்துகிருஷ்ணன், கணேசன், மாவட்ட பொருளாளா் முத்துராமன், துணைத் தலைவா் தேவ், இந்து முன்னணி கோட்ட செயலாளா் மிசா சோமன், அகில பாரத இந்து மகா சபா த.பாலசுப்பிரமணியன், நாஞ்சில் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும் பா.ஜ.கவின் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ஆதரவாக நில ஆக்கிரமிப்பு தடைபட்டது.
Input & Image courtesy:Dinamani News