"கடந்த 2010ல் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பாலிதீன் கழிவு மறுசுழற்சி மையம் " மோடியிடம் உரையாடிய ஜெயந்தியின் ஊக்கம் தர கூடிய பேச்சு !

நாடு முழுதும் உள்ள நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை அவர் வெளியிட்டார்.

Update: 2021-08-13 02:35 GMT

மகளிர் சுய உதவி குழுவினருடன் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது நாடு முழுதும் உள்ள நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே என். பஞ்சம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் பாலிதீன் மறுசுழற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகளிர் கூட்டமைப்பு மேலாளர் ஜெயந்தி குழுவினரும் பங்கேற்றனர்.  

இதில், ஜெயந்தி பேசியதாவது: கடந்த 2010ல் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பாலிதீன் கழிவு மறுசுழற்சி மையத்தில் 36 பேர் வேலை பார்க்கின்றனர். 1 கிலோ ஐந்து ரூபாய்க்கு பாலிதீன் கழிவுகளை வாங்கி மதிப்பு கூட்டுப் பொருட்களாக உற்பத்தி செய்கிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் 32 டன் பாலிதீன் கழிவுகளை சேகரித்து, அரசின் தார் ரோடு பணிக்கு கொடுத்துள்ளோம். நிரந்தர வேலை, வருவாய் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

வணக்கம் என்று தமிழில் கூறி பிரதமர் மோடி பேசுகையில், ''வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமான நோக்கு மட்டுமின்றி சமூகம் சார்ந்த அக்கறையுடன் பணியை மேற்கொள்வதற்கு பாராட்டுகள். ''இதை, சமுதாயத்துடன் இணைந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளாக முன்னேற்றம் பெற செய்ய வேண்டும். ''மகளிர் அனைவரும் தொழில் வாய்ப்புகளை தேடி கற்க வேண்டும். தொழில் நுட்பங்களை நேரடி களப் பயிற்சி மூலம் கற்பதால் சாதனை எளிதாகும். ''வருவாய் மட்டுமின்றி, சமுதாய நோக்கோடு தொழிலை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

Image Source : Dinamalar

Dinamalar

Tags:    

Similar News