செயற்கைகோள் நிலவை நோக்கிய பயணம்: நாசாவின் சாதனை!
பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி இருந்த செயற்கைக்கோள் தற்போது நிலவை நோக்கி பயணம்.;
தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக்கோள் நிலவை நோக்கி பயணத்தை மேற்கொண்டு உள்ளது. மேலும் இது நிறைவை அடையும் நான்கு மாத காலம் அவகாசம் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது.
நியூசிலாந்தில் உள்ள நோக்கியா தீபகற்பத்தில் சிறிய எலக்ட்ரானிக் வீட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை கடந்த ஆறு நாட்களுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயல்கள் தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் அடைந்துள்ள நிலையில், இது வெற்றிகரமாக செயற்கைக்கோளில் இருந்து பிரிந்து நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறுகையில், மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். மேலும் இந்த செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேட்வே விண்வெளி நிலையத்தில் சுற்றுப் பாதையை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது.
Input & Image courtesy: Malaimalar