விரைவில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள்... மத்திய அமைச்சர் பெருமிதம்...

தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய அனைவரும் ஒருங்கிணைந்த சுகாதாரத்தை பேண வேண்டும்.

Update: 2023-04-23 05:25 GMT

மருத்துவ அறிவியலுக்கான தேசிய அகாடமியின் 63-வது நிறுவன நாள் விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய அனைவரும் ஒருங்கிணைந்த சுகாதாரத்தை பேண வேண்டும் என்று கூறினார். உடல்நலன், மனநலன் மற்றும் ஆன்மாவின் நலன் ஆகியவை இணைந்த ஒருங்கிணைந்த சுகாதாரம் அவசியம் என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.


இந்திய சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் மருத்துவ அறிவியலுக்கான தேசிய அகாடமியின் பங்கை அவர் பாராட்டினார். நாடு முழுவதும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கான நடவடிக்கை மற்றும் சுகாதார கொள்கை வடிவமைப்பு ஆகியவற்றிலும் இந்த அமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்று அமைச்சர் கூறினார். சுகாதாரத் துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிகள் பற்றி பட்டியலிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் பொதுமக்கள் நலன் சார்ந்த மருத்துவத் துறை விவகாரங்களில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவத் துறையினரை அவர் வலியுறுத்தினார்.


கொரோனா தொற்றின் போது, மருத்துவ ஆராய்ச்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்து என்பதை நாம் உணர்நதோம் என்றார். இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் வாயிலாக கிடைக்கும் பலன்கள் உடனடியானது என்பதோடு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இந்தியாவிற்கு மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமைந்தது என்றார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News