நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் - அமித்ஷா!

நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் - அமித்ஷா!

Update: 2019-11-21 06:26 GMT

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு இருந்து விடுபட்டு இருப்பவர்கள் இதற்காக  அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தை அணுகலாம் ஏற்படும் செலவுகளை அசாம் மாநில அரசு ஏற்கும் எனவும் அவர் கூறினார் நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தவர் குறிப்பிட்ட மதத்தினரை தேசிய பதிவேட்டில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப் படுவார்கள் என்ற செய்தி பொய்யானது என்று தெரிவித்தார்.



எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக இல்லை புறக்கணிப்பது இதில் இருக்காது என தெரிவித்தார், சாதி, மத, பேதமின்றி தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் எனவும் கூறினார்,மக்கள் அச்சப்படாமல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்,வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் காண அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த இந்த திட்டம் இனி அனைத்து மாநிலங்களிலும் எளிதில் கண்டறிய முடியும்,
தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.


இதன் முலம் சரியான ஆவணங்கள் இன்றி ஊடுருவியுள்ளவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவர் ,என திட்டத்திற்கு எச் ராஜா பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா போன்றவர்கள்ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.




https://twitter.com/HRajaBJP/status/1197147911563268096?s=19




https://twitter.com/Tejasvi_Surya/status/1197070244197453825?s=19

Similar News