திருச்சியில் 2-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் புதிய விமான முனையம் மற்றும் 19,850 கோடி திட்டங்கள்!
பிரதமர் மோடி இரண்டாம் தேதி திருச்சி வருகிறார். முன பிரம்மாண்ட விழாவில் 19850 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பெரு நகரமாக திருச்சி திகழ்ந்து வருகிறது . நாளுக்கு நாள் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இங்களுள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து புதிய விமான நிலையம் முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூபாய் 951 கோடி ஒதுக்கீடு செய்தது. 2019 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்கின. பின்னர் கூடுதலாக ரூபாய் 249 கோடி செலவு செய்து கட்டுமான பணிகள் ரூபாய் 1200 கோடியை நிறைவு பெற்றுள்ளது. பு
திய முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் நான்காயிரம் சர்வதேச பயணிகளையும் 1500 உள்ளாட்டு பயணிகளையும் கையாள முடியும். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான முனைய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை புரிகிறார்.
அங்கிருந்து கார் மூலம் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார் . அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் . பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பிரமாண்ட விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார் . திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள திட்ட பணிகளின் விவரம் வருமாறு :-
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மத்திய அரசு நிதியில் ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் நான்கு மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்கிறார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர் திருவள்ளூர் - பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம் -மதுரை- தூத்துக்குடி வரை 48 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இன் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா - தர்மபுரி மல்டி ப்ராடக்ட் பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இருத்திட்டங்களும் முக்கியமானவை ஆகும் .