பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் கண்டுப்பிடிப்பு: ஒமைக்ரானை விட வேகமாக பரவும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
உலகளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தோன்றியது. அது படிப்படியாக உலகத்தை ஆக்கிரமித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் ஐஎச்யூ என்ற புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒமைக்ரான் வைரஸை விட மிக வேகமாக பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கண்டறியப்பட்டிருந்தாலும், உலக சுகாதார மையம் இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறது.
இந்த வைரஸ் அறிவியல் ரீதியாக IHU திரிபை B.1.640.2 என குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 46 பிறழ்வுகளை கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் பிரான்ஸ் நாட்டில் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. ஏற்கனவே கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளது. தற்போது மேலும் ஒரு புதிய வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள உலக மக்களை மேலும் பீதியடைய செய்துள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy:PBS