புதிய மின் இணைப்பு பெற உயிர்காக்கும் கருவி பொருத்துவது கட்டாயமா?

புதிய மின் இணைப்பு பெறும் பொழுது உயிர் காக்கும் கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.

Update: 2022-12-03 05:28 GMT

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர்கள் ஆர்.சி.டி எனும் உயிர் காக்கும் கருவியை பொருத்துவது கட்டாயமாக பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது தெரிவித்து இருக்கிறது. இது குறித்து இந்த ஆணையும் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்து குறிப்பின்படி, தமிழ்நாட்டின் மின் பழுதுபார்க்கும் ஏற்படும் விபத்துக்களால் அதிக அளவிலான மனித இறப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மின்சாரமான விதி தொகுப்பு 162 படி, புதிய மின் இணைப்பு பெறுவோர் கட்டாயம் ஆர்.சி.டி என்று உயிர்காக்கும் கருவியை தங்களுடைய மின் இணைப்பில் பொருத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.


மழைக்காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துக்களால் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் புதிய மின் நுகர்வோர் மட்டுமல்லாது அனைத்து நுகர்வோருக்கும் RCD கருவி பொருத்த வேண்டும். கடந்த சில மழைக்காலம் மாதங்களில் இரும்பு கதவு திறந்தல்,bஇரும்பின் துணிகளை உலர்த்துதல், மின் விளக்கு கம்பத்தை தொடுதல் போன்று விட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.


இந்த RCD உயிர் காக்கும் கருவியை பொருத்துவதன் மூலமாக இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும். குறிப்பாக கடை, வீடு, தொழில், கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள் அனைத்திலுள்ள மின் நுகர்வோருக்கு அனைவரும் இந்த கருவியை மின் இணைப்பில் பொருத்துமாறு தற்போது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News