அறிவியல் சாதனையாளர்களுக்கு புதிய தேசிய விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!
அறிவியல் சாதனைளர்களுக்கு புதிய தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
'ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார்' என்ற பெயரில் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றாகும். அரசு தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள், அறிவியல் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சியாளர்கள் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
அறிவியல் ரத்னா, அறிவியல் ஸ்ரீ, அறிவியல் இளையோர், சாந்தி ஸ்வரூப் பட்னாகர் மற்றும் அறிவியல் குழு என நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இயற்பியல், வேதியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட 13 துறைகளில் இவை வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி முதல் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பெறப்படுகிறது. தேசிய தொழில்நுட்ப தினமான மே-11-ந் தேதி விருதுகள் அறிவிக்கப்படும். தேசிய விண்வெளி தினமான ஆகஸ்ட் 23- ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும். அனைத்து விருதுகளுக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI