அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் தெலைபேசியில் தகவல் உதவி பெற என்ன செய்ய வேண்டும்?
அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு படைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் IVR சேவையை பெற முடியும்.
தற்போது அனைவருமே அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் தனக்கென ஒரு தனி கணக்கைத் தொடங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கிற்கு மக்களிடம் தற்போது புதிய மவுசு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் கொடுக்கும் அதை வட்டி விகிதத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் கொடுப்பதால் பல்வேறு மக்கள் தற்போது அஞ்சலக சேமிப்பு களில் தங்களுடைய முதலீடுகளை செலுத்துகிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக அஞ்சலகங்கள் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
தற்போது அஞ்சல் தறை ஒரு புதியசேவை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. IVR சேவை முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை வீட்டிலிருந்தபடியே தொலைபேசியின் மூலமாகவே அனைத்து வசதிகளையும் பெற முடியும். சந்தேகங்களை உடனே தீர்த்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட ஃபோன் நம்பரில் இருந்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868 என்ற நம்பரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக தீர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இனி ஏடிஎம் கார்டை தடை செய்தல் புதிய காடுகளை பெறுதல் மேலும் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் பிற சேவைகள் அனைத்தைப் பற்றியும் தேவையான தகவல்களை உங்கள் வீட்டில் இருந்தே பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News 18