புதிய ஸ்மார்ட் கார்டு: ஆன்லைனில் அப்ளை செய்வது இவ்வளவு சுலபமா?

புதிய ரேஷன் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய செயல்முறை.

Update: 2022-04-25 01:50 GMT

மத்திய அரசால் வழங்கப்படும் இலவச பொருட்களை பெறுவதற்கு மிகவும் முக்கியமான ரேஷன் கார்டு ஒன்றாக இருந்து வரகிறது. மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெற ஸ்மார்ட் கார்டு என்பது மிகவும் முக்கியம் அந்த வகையில் புதிதாக ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?  ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள்.


இதற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து மாதங்கள் வரை ஆகலாம். ஆனால் தற்பொழுது ஆன்லைனில் இதற்கான வழிமுறைகள் மிகவும் சுலபம். ரேஷன் அட்டை கோரி, தமிழ்நாடு அரசு வலைதளமான https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். இது உங்களைப் புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு உதவி செய்கிறது. கொடுக்கப்பட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 


அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ளத உங்களுடைய பயனாளர் ஐடி ஒன்று உருவாக்க வேண்டும் மேலும் நீங்கள் கொடுக்கப்படும் நம்பருக்கு OTP வரும். அதில் ஸ்கிரீனில் பதிவு செய்து சுய விவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும். இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை படித்து கேட்கப்படும் விவரங்களை படிவு செய்து, அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும். இந்த காப்பியை பிரிண்ட் போட்டு, உங்கள் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News