ரயில் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம்: 2025-ல் அறிமுகம்!

ரயில் வேகத்தை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா 2025-ல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Update: 2022-11-27 06:16 GMT

வளைவு பாதைகளில் பயணிக்கும் போது வேகத்தை குறைக்காமல் இருப்பதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில்கள் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் இன்று தெரிவித்து இருக்கிறது. வளைவு பாதைகளில் ரயில் திரும்பும் பொழுது ஏற்படும் மையவிலக்கு திசை காரணமாக பயணிகளின் உடைமைகளுக்கு ஏற்ற திசையில் ஈர்ப்பு விசையால் இடது புறமாகவோ, வலது புறமாகவோ சாயும்.


அப்பொழுது அமர்ந்திருக்கும் பயணிகள் பக்கவாட்டில் ஒருவர் மீது ஒருவர் சாயவும், மோதிக் கொள்ளவும், நின்று பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளின் நிலை தடுமாறவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை கடக்கும் நோக்கில் வளைவு பகுதிகளில் ரயில் செல்லும் பொழுது வேகம் குறைக்கப்படுவது வழக்கம். இந்த நடுவில் வளைவு பாதைகளில் ஏற்படும் மையவிலக்கு  விசையை தடுக்கும் வகையிலான ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் இது தொடர்பாக ரயில்வே நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு ஆண்டிற்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அவற்றின் நூறு ரயில்களில் இந்த புதிய தொழில்நுட்பம் இடம்பெறும். அதற்காக புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது. படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 2024 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும். சர்வதேச தரத்துடன் அந்த ரயில்கள் சென்னை ஐசிஎஃப்- இல் தயாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News