நோய் எதிர்ப்பு தன்மை புதிய ரக மரவள்ளி கண்டுபிடிப்பு: ஆராய்ச்சி விஞ்ஞானி தகவல்!

புதிய நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட புதிய ரக மரவள்ளி கண்டுபிடிக்கப்பட்ட இருப்பதாக ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தகவல்.

Update: 2022-12-26 02:22 GMT

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மாவு பூச்சி உள்ளிட்ட நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி அதிகமாக மகசூல் கிடைக்கும் மரவள்ளி ரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என விஞ்ஞானி ராஜன் முத்துராஜ் பேசியிருக்கிறார். நாமக்கலில் மத்திய அரசின் கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய சார்பில் விவசாயிகள் திருவிழா நடைபெற்றது.


திருவனந்தபுரம் மத்திய கிழக்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி, முத்து ராஜ் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறும்பொழுது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மரவள்ளி, சீனி கிழங்கு, சேப்பக்கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள் சாகுபடி கொடுத்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 ரக மரவள்ளி பயிர்கள் ரகங்களை புதிது கண்டுபிடித்து வெளியிட்டுள்ளோம். தற்போது மரவள்ளியில் மாவு பூச்சி உள்ளிட்ட நோய்களை தாக்குதலை பெருமளவில் கட்டுப்படுத்தி, அதிக மகசூல் கிடைக்கும் வகையில் புதிய ரக மரவள்ளிகளை அறிமுகம் செய்து இருக்கிறோம்.


இந்த புதிய ரகங்களின் மூலம் மரவள்ளியில் 30 முதல் 33 சதவீதம் அளவிற்கு மாவட்டத்து கிடைக்கும் மாவு தாக்குதல் மாவு பூச்சி தாக்கும் தாக்கும் மெதுவாக குறையும் ரசாயன மருந்துகள் எதுவும் அடிக்க தேவையில்லை நோய் எதிர்ப்பும் தன்மை உள்ளது ஏக்கருக்கு 15 டன் வரை மகசூல் பெறலாம் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் இந்த புதிய ரகங்களை பிரபலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Hindu Tamil News

Tags:    

Similar News