இந்திய தூதரை தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. இந்தியாவின் சார்பில் கண்டனம்..
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் சார்பில் வெளிநாடுகளில் தூதர்களாக இருக்கும் இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். குறிப்பாக அந்தந்த நாடுகளை சேர்ந்த ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய தூதர்களை அவமானப்படுத்துவது மற்றும் இந்திய தேசிய கொடிகளை அவமதிப்பது போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குரு குருத்துவாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேர் இந்திய தூதரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக அவரை காரில் செல்ல விடாமல் தடுத்தார்கள் . இந்திய தூதர் திரும்பி சென்றார். பின்னர் மூன்று பேரும் குருத்வார்க்கு சென்று வழிபட்டு பணிகளை சீர்குலைத்தனர். இது தொடர்பாக நிர்வாகம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
தங்களது குருத்துவார அனைத்து மதத்தினரையும் வரவேற்பதாகவும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேரை தேடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸ் தீவிரவு சாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பின்னணியில் யார் இருக்கிறார் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: News