பிரதமருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் ஏலம்.. இந்த நிதி எதற்கு உதவுகிறது தெரியுமா?

Update: 2023-10-05 03:20 GMT

பிரதமருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகளைக் காட்சிப்படுத்த தேசிய நவீன கலைக்கூடத்தில் கண்காட்சி. நமாமி கங்கா பயன்பாட்டிற்காக பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்படும். தமக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.


இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது இந்த அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகள் தமக்கு வழங்கப்பட்டதாகவும், இவை, இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும் என்றும் மோடி கூறியுள்ளார். எப்போதும் போல, இந்தப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாய் நமாமி கங்கா முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மேலும் கூறினார். தேசிய நவீன கலைக்கூடத்தை நேரில் பார்வையிட வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வலைத்தள இணைப்பையும் பிரதமர் மோடி அவர்கள் பகிர்ந்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "கண்காட்சியில், அண்மைக்காலத்தில் எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது எனக்கு வழங்கப்பட்ட இவை, இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும். எப்போதும் போல, இந்தப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாய் நமாமி கங்கா முயற்சிக்கு ஆதரவளிக்கும். அவற்றை சொந்தமாக்க இதோ வாய்ப்பு! மேலும் அறிய தேசிய நவீன கலைக் கூடத்தைப் பார்வையிடவும். தனிப்பட்ட முறையில் பார்வையிட வாய்ப்பில்லாதவர்களுக்கு pmmementos.gov.in வலைத்தள இணைப்பைப் பகிர்ந்துள்ளேன்" என்று கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News