ஆதி கைலாச தரிசனத்தால் மனமும் மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி மேற்கொண்ட பூஜை!
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பித்ரோகார் பகுதியில் முடிவுகளை எட்டியுள்ள வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்கவும் புதிய பணிகளை துவக்கி வைக்கவும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிந்தார்.
இந்த நிலையில் பார்வதி குந்த்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார். இந்த வழிபாட்டின் பொழுது பாரம்பரிய உடைகளை அணிந்து வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் உத்தரகாண்டில் உள்ள பித்தோராகரின் புனித பார்வதி குண்டில் தரிசனம் மற்றும் வழிபாடுகளில் நான் மூழ்கிவிட்டேன். இங்கிருந்து ஆதி கைலாச தரிசனத்தால் மனமும் மகிழ்ச்சி அடைகிறது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் இந்த இடத்தில் இருந்து, அவர் தனது நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்த்தினார் என பதிவிட்டுள்ளார்.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கும் பார்வதி குந்த்தில் பிரதமர் சிவனை நோக்கி பூஜை செய்த புகைப்படங்கள் அனைவராலும் பகிரப்படுகிறது.
Source - Dinamalar