மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா.. தேசத்தை வழிநடத்துவதற்கான பிரதமர் அழைப்பு..
19 செப்டம்பர் 2023 அன்று, அரசியலமைப்பு (நூற்று இருபத்தி எட்டாவது திருத்தம்) மசோதா, 2023 மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் இருந்து பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 1/3 இடங்களை ஒதுக்குவதற்கு வழி வகுக்கும் இந்த மசோதா 20 செப்., அன்று உறுப்பினர்களிடையே கிட்டத்தட்ட 100% ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் என்பது, பெண்கள் நமது தேசத்தை வழிநடத்துவதற்கான பிரதமர் அழைப்பு.
நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். நாரி சக்தி வந்தன் அதினியம் எனப்படும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி எழுதிய கட்டுரை தொடர்பாகப் பிரதமர் அலுவலகம்,சமூக ஊடக எக்ஸ் பதிவை பகிர்ந்து உள்ளது.
குறிப்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பது, "அண்மையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா பெண்களுக்கு அதிகாரமளித்தலின் அடையாளமாகவும், நமது தேசத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த பெண்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் எவ்வாறு திகழ்கிறது என்பதை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி எழுதியுள்ளார்.”
Input & Image courtesy: News