மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு கொடுத்த ஜாக்பாட்- நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாட்கள் சம்பள பணமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-10-19 10:30 GMT

அரசின் பதிவு பெறாத தகுதி உடைய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும். தண்டவாள பராமரிப்பாளர் , லோகோ பைலட், கார்டுகள் நிலை அதிகாரிகள், சூப்பர்வைசர்கள், டெக்னீசியன்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ் மேன் அமைச்சு பணியாளர்கள், இதர குரூப் சி பணியாளர்கள் ஆகியோருக்கு போனஸ் கிடைக்கும்.


மொத்தம் 11 லட்சத்து 7,346 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். இதற்காக ரூபாய் 1968 கோடியே 87 லட்சம் ஒதுக்க மத்தியமந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும். இதே போல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியையும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் தலா 4% உயர்த்த மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது .ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு அவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும். பண்டிகை காலத்தில் அவர்களின் நலனுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News