குஜராத்தின் தோர்டோ கிராமம்.. ஐ.நாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது..
சிறந்த சுற்றுலா கிராமமாக ஐ.நாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பால் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். தோர்டோ கிராமத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், 2009, 2015-ஆம் ஆண்டுகளில் அந்த கிராமத்திற்குத் தாம் பயணம் மேற்கொண்டபோது எடுத்த சில படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "கட்ச்சில் உள்ள தோர்டோ அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காக கொண்டாடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கௌரவம் இந்திய சுற்றுலாவின் திறனை மட்டுமல்ல, குறிப்பாக கட்ச் மக்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. தோர்டோ கிராமம் தொடர்ந்து பிரகாசிக்கட்டும். உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் வாழ்த்துகள்.
2009 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தோர்டோவுக்கு நான் சென்ற சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். தோர்டோவுக்கு நீங்கள் இதற்கு முன்பு வந்திருந்தால் உங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன். இது தோர்டோ கிராமத்தை அதிகமானோர் பார்வையிடுவதை ஊக்குவிக்கும். மேலும், #AmazingDhordo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்த மறக்காதீர்கள்.
Input & Image courtesy: News