இந்திய பொருளாதாரத்தின் உந்து சக்தி இதுதான்.. மத்திய அமைச்சர் கூறியது எதை?

Update: 2023-11-03 03:06 GMT

கர்நாடகாவின் பெங்களூரில் மூன்று நாள் 'இந்தியா உற்பத்தி கண்காட்சியை' பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2023, நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை லகு உத்யோக் பாரதி & ஐஎம்எஸ் அறக்கட்டளை, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 'இந்தியாவில் உற்பத்தி, உலகுக்கான உற்பத்தி' என்பது இந்தக் கண்காட்சியின் மையப்பொருளாகும். தொடக்க விழாவில் கலந்து கொண்ட தொழில்துறை தலைவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறுதொழில்கள் என்றார்.


இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருப்பது சிறு தொழில்கள்தான்; மோட்டார் எவ்வளவு வேகமாக ஓடுகிறதோ, அந்த அளவுக்கு பொருளாதார வாகனம் வேகமாக நகரும் என்று கூறிய அவர், பொருளாதாரத்தில் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் சிறு தொழில்களைப் பாராட்டினார். நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தொழில்களின் முக்கிய பங்களிப்பை திரு. ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். "செய்யப்படும் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, பெரிய தொழில்களை விட சிறிய தொழில்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அவை சமூகத்தில் செல்வத்தை இன்னும் சமமாகப் பரப்புவதையும் உறுதி செய்கின்றன. பல எம்.எஸ்.எம்.இ.க்கள் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படுகின்றன.


மேலும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் உலகளாவிய விநியோகத் தொடரின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியில் கனரக தொழில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன, ஆனால் சிறு தொழில்களைப் புறக்கணிப்பதன் மூலம் நாடு முழுமையாக முன்னேற முடியாது" என்று அவர் கூறினார். "பண்டைய காலத்தில், இந்தியாவில் பெரிய அளவிலான தொழிற் சாலைகள் இல்லை. சிறு தொழில்கள் மட்டுமே. ஜவுளி, இரும்பு, கப்பல் கட்டுமானம் ஆகிய மூன்று தொழில்களுக்கும் இந்தியா உலகம் முழுவதும் அறியப்பட்டது. அவர்கள் நமது தொழில்துறை திறனை வெளிப்படுத்தினர் "என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News