செல்ஃபி எடுங்கள்! நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர்!

Update: 2023-11-07 06:12 GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதியில் மக்களுக்கு உரையாற்றும் பொழுது கோவிட்-19 தொற்றுக்கு பிறகு இந்தியா அடைந்த பொருளாதார சரிவை மீட்டெடுக்க உள்ளூருக்கான குரல் என்ற அழைப்பின் மூலம் இந்தியாவை தன்னிறைவு இந்தியாவாக மாற்றும் செயல்முறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். ஒரு பெரிய உள்ளூர் சந்தையாக இந்தியாவை மாற்றுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் ஒவ்வொன்றையும் உலக அளவில் எடுத்துச் செல்வதும் தான் உள்ளூர் குறளின் பின்னணி என்றும் அவர் தெரிவித்தார். அதன்படியே கடந்த இரண்டு ஆண்டுகளில் லோக்கல் ஃபார் லோக்களின் சந்தை விரிவடைந்து வந்துள்ளது. 


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வோக்கல் ஃபார் லோக்கல் முன்னேடுப்பு நாடு முழுவதும் வலுவடைந்து வருவதால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களில் நீங்கள் வாங்கிய பொருளுடன் செல்பி எடுத்து அதனை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யுங்கள் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Source : Dinamalar 

Similar News