அரசின் திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியைத் தருகின்றன.. பிரதமர் மோடி..
மத்திய அரசு ஒவ்வொரு திட்டங்களும் தீபாவளி அன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு பேசி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு பதவியேற்று பிறகு ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு திட்டங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போலி பயனாளிகளின் பட்டியலில் நீக்கிவிட்ட தற்பொழுது உண்மையான ஒவ்வொரு பயனாளிகள் வீட்டிலும் இத்தகைய திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம்.
அரசின் பல்வேறு திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். பிரதமர் வீட்டுவசதி திட்டம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் விவசாயி கௌரவிப்புத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட், ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களின் நன்மைகளைத் தெரிவிக்கும் வீடியோவை மைகவ்இந்தியா எக்ஸ் வெளியிட்டுள்ளது.
மை இந்தியா எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது, “தீபாவளித் திருநாளில் தற்போது நாட்டின் ஒவ்வொரு வீடும் நமது மக்கள் நலத் திட்டங்களால் ஒளிர்கிறது என்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்" என்று பிரதமரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News