பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க சிறப்பான ஒப்பந்தம்.. அடுத்த கட்டத்திற்கு நகரும் இந்தியா..
இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம், லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் & வெய்சி இந்தியா ஆகியவை குருகிராமின் மானேசரில் நேற்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐசிஏ-வின் டாக்டர் லதா சுரேஷ் மற்றும் லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ்-சின் நிறுவனர் உமேஷ் ரத்தோட் ஆகியோர் கையெழுத்திட்டனர். பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்) மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிப்பதும், அவர்களின் அறிவு, திறன்களை மேம்படுத்துவதும், தொழிலாளர்களை நிர்வகிப்பதும் இதன் நோக்கம்ஆகும்.
ஐஐசிஏ-வுடன் இணைந்து, லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனம் பெண் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை வழங்கும். பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தலில் அவர்களுக்கு வளங்கள், பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பிற ஆதரவு வழிமுறைகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சித் திட்டங்களில் பெண்களிடையே தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பயிலரங்குகள், பயிற்சி அமர்வுகள், மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்என்று டாக்டர் லதா சுரேஷ் கூறினார்.
லன் கேம்பஸ் ஸ்டார்ட் அப்ஸ் என்பது கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் சிறந்த முன்முயற்சிகள் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் செயல்படும் நிறுவனம் ஆகும். மிஷன் கேடலிஸ்ட் அறக்கட்டளையின் கீழ் இது செயல்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட மிஷன் கேடலிஸ்ட், புத்தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் உதவியுடன் நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்து செயல்படுகிறது.
Input & Image courtesy: News