இந்திய இசையை கற்றுக்கொண்ட சிங்கப்பூர் துணை பிரதமர்.. இந்திய பிரதமர் மோடி பாராட்டு..

Update: 2023-11-15 11:03 GMT

இந்தியாவின் இசை என்பது பழங்காலத்தில் இருந்து குறிப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இசையானது தற்போது உலக அளவில் உள்ள அனைத்து மக்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் துணை பிரதமர் அவர்கள் இந்திய இசையை கற்பதில் அதிக ஆர்வம் கொண்டு அதை கற்றுக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.


இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார். சித்தார் மீது சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ஈடுபாட்டிற்குப் பிரதமர் பாராட்டு. சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வோங்க்-இன் பதிவுக்கு பதிலளித்து மோடி பதிவிட்டுள்ளதாவது, "சித்தார் மீதான உங்கள் ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். இந்த இனிய முயற்சிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்" என்று சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய கருத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News