மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா.. ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடக்கம்..

Update: 2023-11-16 03:09 GMT

2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலக அளவில் தோன்றி மக்களை படாதபாடு பl படுத்தியது. குறிப்பாக சீனாவில் இருந்து தான் இந்த ஒரு கொரோனா வைரஸ் தோன்றியதாகவும், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அனைத்து மக்களையும் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் முடங்க வைத்த வைரஸ் கொரோனா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு நாடுகள் தங்களுக்கு தாங்களே தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திய நிலையில் வந்த பிறகு மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக சீனாவின் உகான் நகரங்களில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட இந்த உருவாக்கிய உலகம் முழுவதும் பெறும் பாதிப்பு ஏற்படுத்தியது.


உலக நாடுகள் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் தற்போது கட்டுக்குள் வந்து இருக்கிறது. எனினும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் அந்த வைரஸ் தலைக்காட்டி வருவது கண்டறியப்பட்டு இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் அங்கு சுமார் 109 புதிய பாதிப்புகள் பல்வேறு நபர்களுக்கு கண்டறியப்பட்டு இருப்பதுடன் 24 பேர் மரணம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வழியாக இருக்கிறது. சீன மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.


வருகின்ற குளிர்காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் பரவல் அதிகரிக்கும் என்று எச்சரித்து இருக்கிறார்கள். முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள் உடனடியாக தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குளிர்காலத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்பாட்டு கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News