மீன்வளத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோடி அரசு.. எப்படி தெரியுமா..

Update: 2023-11-18 04:03 GMT

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீன்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023ஐ நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் அகமதாபாத்தில் நடத்துகிறது. மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் பங்களிப்பு, சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், மீன்வளத் துறையின் நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், மத்திய அரசின் மீன்வளத் துறை, உலக மீன்வள தினத்தை முன்னிட்டு உலகளாவிய மீன்வள மாநாடு இந்தியா 2023 ஐ நடத்துகிறது.


அகமதாபாத்தில் உள்ள குஜராத் அறிவியல் நகரத்தில் 2023 நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் 'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளத்தைக் கொண்டாடுங்கள்' என்ற கருப்பொருளில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலாஷ் லிகி ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த மாநாட்டிற்கு வெளிநாட்டுத் தூதரகங்கள், வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேச அமைப்புகள், தொழில் சங்கங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுக்கு மீன்வளத் துறை அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா எடுத்துரைத்தார். இறால் வளர்ப்பு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி சேர்க்கை, உள்நாட்டு மீன் நுகர்வை ஊக்குவித்தல் மற்றும் மீன்வளத்தின் நிலையான வளர்ச்சிக்கான வழி குறித்து மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சியில் மீன்வளத் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும், மீன் உற்பத்தி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News