மோடி அரசின் திட்டத்தினால் இவ்வளவு மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்களா?
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வீடு, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பெறுவதற்கான மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களும், குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், பயனடைய வேண்டும் என்பதற்காக வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை நாடு முழுவதும் நடைபெறுவதாக மத்திய திறன்மேம்பாடு, தொழில் முனைவு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த யாத்திரை குறித்து சிறப்பு பேட்டியளித்த அவர், நரேந்திர மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டிருப்பதாக கூறினார். மத்திய அரசின் திட்டங்களால் கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதே போல் வரும் 5 ஆண்டுகளில் பிரதமரின் வீட்டுவசதி, மருத்துவக் காப்பீடு, விவசாயிகள் கௌரவிப்பு, கிராமங்கள் மின்மயமாக்கல், உஜ்வாலா, திறன் இந்தியா போன்ற திட்டங்களாலும், ஜல்சக்தி இயக்கத்தின் மூலமும் மக்கள் அனைவரும் பயனடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த யாத்திரையின் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நிறைவேற்றவும், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டார்.
Input & Image courtesy: News