கோவை கூலி தொழிலாளியை மனதார பாராட்டிய பிரதமர்.. அப்படி என்ன செய்கிறார் தெரியுமா?
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதத்தின் கடைசி ஞாயிறுகளில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த பகுதியில் தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது சேவை தொடர்பாக பேசி பாராட்டியதற்காக பிரதமருக்கு கோவையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், நேற்று ஒலிபரப்பாகிய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான லோகநாதன் குறித்தும், அவரது சேவை பற்றியும் பிரதமர் பாராட்டி பேசி இருக்கிறார் யார் இவர்? என்பதை தற்போது பார்ப்போம். தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் வசித்து வரும் லோகநாதன், கடந்த 22 வருடங்களாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்.
குறிப்பாக கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை இதுதான். தன் வறுமையாக இருந்தாலும் தான் படிக்க முடியாத காரணத்தினால் எளிய மாணவ மாணவிகள் படிக்க வேண்டும் என்பதற்காக இவர் கழிவறையை கூட சுத்தம் செய்து அவற்றில் கிடைக்கும் பணம் மூலமாக பல்வேறு தரப்பு ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இவற்றை முன்னிறுத்தி பிரதமர் இவரை மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியிருக்கிறார்.
Input & Image courtesy: News