வெளிநாடுகளில் திருமணம் செய்வது அவசியம் தானா? மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் கூறிய முக்கிய தகவல்!!

Update: 2023-11-27 08:34 GMT

2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், திருமண சீசன்கள் தற்போது தொடங்கியுள்ளது இந்த சீசன்களில் சுமார் ஐந்து லட்சம் கோடி வரையிலான வர்த்தகம் நடக்கும் என்று சில வர்த்தக நிறுவனங்கள் கணித்துள்ளது. ஆதலால் உங்கள் திருமணங்களுக்கான ஷாப்பிங் நீங்கள் செய்யும் பொழுது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

அதே சமயம் திருமணம் என்று கூறும் பொழுதே நீண்ட நாளாக எனக்குத் ஒரு விஷயம் நினைவிற்கு வந்து கொண்டே உள்ளது. 


அதாவது சமீப நாட்களாகவே சில குடும்பங்களின் திருமணங்கள் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. இது தேவைதானா சொந்த நாட்டிலே வெளிநாடுகளில் நீங்கள் செய்யும் திருமண விழாவை இங்கு அமைக்கலாமே! நீங்கள் விரும்புகின்ற அமைப்புகளும் ஏற்பாடுகளும் இங்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் அவற்றை இங்கு அமைக்க நீங்கள் முற்படும் பொழுது அதற்கான அமைப்புகள் துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும். இந்த செய்தி மிகப்பெரிய குடும்பங்களுடன் தொடர்புடையது, இது அவர்களுக்கு சென்றிருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். 

Source : Vikatan 

Similar News