தேசிய பால் தினத்தை புறக்கணிக்கும் ஆவின் நிறுவனம்! தமிழக பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத் தலைவர் கண்டனம்!

Update: 2023-11-27 10:17 GMT

ஆவின் நிறுவனம் தனது தேசிய பால் தின வாழ்த்து செய்தியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் புறக்கணித்து வருகிறது! என தமிழக பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா தன்னிறைவு அடைந்த நாடாக முதலிடத்தில் திகழ காரணமாக இருந்தவரும் பால்வளத் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர் வர்கீஸ் குரியன். இவரது பிறந்த நாளான நவம்பர் 26 ஐ இந்திய அளவில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாடு தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தனது பால் பாக்கெட் களை தேசிய பால் தின வாழ்த்து செய்தியை வெளியிட்டு வரும். ஆனால் கடந்த ஆண்டு ஆவின் நிறுவனம் தேசிய பால் தின வாழ்த்து செய்தியை வெளியிடவில்லை. இந்த நிலையில் 2023 நவம்பர் 26 அன்றும் தேசிய பால் தின வாழ்த்து செய்தியை ஆவின் நிறுவனம் வெளியிடாமல் புறக்கணித்துள்ளது. இதனை எங்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது!! 


அதுமட்டுமின்றி அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆவின் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் வாழ்த்து செய்தியை வெளியிடாமல் புறக்கணித்து வருகிறது. இதன் வரிசையில் தற்போது தேசிய பால் தினமும் சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசும் ஆவின் நிர்வாகமும் தமிழக மக்களிடம் அதிலும் குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களிடம் பகிரங்கமான வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் இது போன்று இனி நடக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : The Hindu Tamilthisai 

Similar News