முதலீட்டிற்கு உகந்த நாடு இந்தியா.. பிரதமர் மோடி விடுக்கும் வேண்டுகோள்..

Update: 2023-11-28 01:08 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு வகையான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் நடத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய முதலீடுகளை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியான வண்ணம் விடுத்து வருகிறது. எங்கள் நாட்டில் முதலீடு செய்ய உலக நாடுகளை வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றம் அளிக்காது என்று பிரதமன் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் மற்ற நாடுகளை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்து இருக்கிறார்.


முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக தொழில்முனைவோர் மத்தியில் உள்ள நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். எழுத்தாளரும், தொழில் முனைவோருமான எஸ். பாலாஜி, இந்தியாவை ஒரு பண்டைய நாகரிகம் என்றும், அதே வேளையில் ஒரு புத்தொழில் போன்ற நாடு என்றும், இந்தியாவின் திறனைப் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பேசியுள்ளார். இது குறித்தான பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேச்சுப் பொருளாகி வருகிறது.


அவருக்குப் பதிலளித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிடும் போது, "உங்கள் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன. மேலும், இந்திய மக்கள் புதுமை என்று வரும்போது டிரெண்ட் செட்டர்களாகவும், முன்னோடிகளாகவும் திகழ்கிறார்கள். எங்கள் நாட்டில் முதலீடு செய்ய உலக நாடுகளை வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றம் அளிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News