துபாயில் பிரதமர் மோடி கூறிய வழிகாட்டுதல்கள்.. உன்னிப்பாக கவனித்த உலக நாடுகள்..

Update: 2023-12-03 04:17 GMT

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற "பருவநிலை நிதியை மாற்றுதல்" குறித்த COB-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வு வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதியை மேலும் கிடைக்கக்கூடியதாகவும், அணுகக் கூடியதாகவும், ஏற்றதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தியது. இந்த அமர்வின் போது, தலைவர்கள் "புதிய உலகளாவிய காலநிலை நிதிக் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் பிரகடனத்தை" ஏற்றுக்கொண்டனர். இந்தப் பிரகடனத்தில் உறுதி மொழிகளை வழங்குதல் மற்றும் லட்சிய விளைவுகளை அடைதல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான சலுகை நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் ஆகிய கூறுகள் அடங்கியுள்ளன.


பிரதமர் தனது உரையில், உலகளாவிய தெற்கின் கவலைகளுக்குக் குரல் கொடுத்தார். வளரும் நாடுகள் தங்களின் பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், தங்களின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல் படுத்துவதற்கும், குறிப்பாக காலநிலை நிதியை, நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான அவசரத் தேவையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.


இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதி செயல்படுத்தப்படுவதையும், ஐக்ககிய அரபு அமீரகத்தின் COB-28 இல் பருவநிலை முதலீட்டு நிதி நிறுவுவப்படுவதையும் பிரதமர் வரவேற்றார். சிஓபி-28 பருவநிலை நிதி தொடர்பான பின்வரும் சிக்கல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பருவநிலை நிதி குறித்த புதிய கூட்டு அளவீட்டு இலக்கில் முன்னேற்றம், பருவநிலை நடவடிக்கைக்காக பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் மூலம் ஏற்ற வகையில் நிதி கிடைக்கப்பெற வேண்டும். வளர்ந்த நாடுகள் 2050க்கு முன் தங்கள் கார்பன் தடத்தை அகற்ற வேண்டும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News