உங்கப்பா கூவம் முதலை கதை தெரியுமா...? மழை விட்டவுடன் முதல்வரை நோக்கி செம்ம நெத்தியடி கேள்வி எழுப்பிய வானதி.....
மழை முடிந்த கையோடு அதிரடியில் இறங்கிய வானதி சீனிவாசன்... 1967 கூவம் முதலை சம்பவத்தை வைத்து கேட்ட நச் கேள்வி...
தற்பொழுது சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்துள்ளது, அதன் காரணமாக தற்பொழுது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி அதனால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த இரு தினங்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு! தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு! மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கும் நிலையில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்று காலை முதல் மழை குறைந்ததால் மெதுவாக தண்ணீர் வடிய துவங்கி தற்பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது, இந்த நிலையில் இரு தினங்களாக அரசியல் ரீதியாக திமுகவை எதுவும் விமர்சிக்காத பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் 1967இல் கூவத்தில் முதலை என்ற கதையையும் கூறி தற்பொழுது உள்ள சென்னை கனமழை சூழலையும் ஒப்பிட்டு வானதி கேள்வி எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் அவர்களே விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.
மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது. 4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2015-ல் 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் 4000 கோடி பணிகளால்தான் பாதிப்பு குறைவு என கூறுவது எப்படி?