புயல் கடந்தும் சென்னையில் சீராகாத தொலைத்தொடர்பு வசதி! மக்கள் அவதி!

Update: 2023-12-05 13:55 GMT

நேற்று சென்னையைக் கடந்த மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் கனமழையால் மூழ்கியது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி பல பகுதிகள் சேதம் அடைந்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ள காடாகவும் மக்கள் வசிக்கும் வீடுகளிலும் வெள்ளம் நிரம்பியது! மேலும் கனமழை காரணமாக மின்சாரமும் தடை செய்யப்பட்டது மற்றும் தொலைதொடர்பு வசதியும் தடை செய்யப்பட்டது. 


இதனால் பெரும்பாலான குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளானர் அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட மக்களால் வெளியில் செல்ல முடியாமலும் தவித்தனர். சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவுக்கு மேல் ஆந்திரா கரையை நோக்கி புயலானது நகரத் துவங்கியது. இதனால் தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் கனமழை இருக்காது சில பகுதிகளில் மட்டும் லேசான மழை இருக்கும், இருப்பினும் சென்னையில் தொலைதொடர்பு சேவை இன்னும் சீரடையவில்லை. தரமணி பகுதியில் உள்ள மக்கள் உணவு இன்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். 

Source : Dinamalar 

Similar News