நிதி மோசடியில் ஈடுபட்ட சீன செயலிகள்! அதிரடி காட்டிய மத்திய அரசு.

Update: 2023-12-06 09:55 GMT

இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டம் போன்றவற்றிற்கு பாதகம் ஏற்படுத்திய சீன அப்ளிகேஷன்களை கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு தடை செய்தது. அதாவது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தால், டிக் டாக், ஷீன், கேம்ஸ்கேனர் மற்றும் பல சீனச் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன, எனவே இந்த மொபைல் செயலிகள் மூலம் பயனாளர்களின் முக்கிய விவரங்கள் திருடப்பட்டது, திருடப்பட்ட தரவுகள் முறைகேடாகக் கண்டறியப்பட்டது.


மேலும் பப்ஜி மொபைல் கேம் இந்திய இளைஞர்களை மொபைல் கேமிற்கு அடிமையாக்கியது. இதனால் கடந்த சில வருடங்களில் கிட்டத்தட்ட 250 சீன அப்ளிகேஷன்களை மத்திய அரசு தடை செய்ய உத்தரவிட்டது. 

 இந்த நிலையில் நிதி மோசடி செய்த குறிப்பாக இந்தியர்களை குறி வைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் 100க்கும் மேற்பட்ட சீன இணையதளங்கள் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த 100க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த தகவலானது உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஆதாரம் - Asianetnews 

Similar News