காஷ்மீரின் முதல் மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி: தடைகளை தாண்டி சாதனை!

Update: 2023-12-08 00:54 GMT

ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக மின்சார ரயில் சேவை இயக்கம் தொடங்கியது. 137 கி.மீ நீளமுள்ள பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான பணிகள் ஆகஸ்ட் 2019 முதல் நடைபெற்று வருவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் 15 கிலோமீட்டர் மின்சார ரயில் சோதனை ஓட்டம் பானிஹால் ரயில் நிலையத்திலிருந்து ரம்பன் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் காரி வரை நடத்தப்பட்டது. 

கத்ரா-பனிஹால் பிரிவில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் ரூ.324 கோடி செலவில் பனிஹாலில் இருந்து பாரமுல்லா வரை ரயில் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. பனிஹால்-பாரமுல்லா ரயில் இணைப்பின் மின் மயமாக்கல் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் மற்றும் செயல்பாட்டுச் செலவை 60 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News