பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்! காஷ்மீர் மக்களுக்கு நீதி வழங்கும் மசோதாக்கள்; மக்களவையில் அமித்ஷா பேச்சு!

Update: 2023-12-08 00:56 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார். அவை ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023. மேலும் மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் உள்ள 24 இடங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பால் காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார். அடுத்து ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஐ மக்களவையில் அவர் தாக்கல் செய்யும்போது ஜம்முவில் இதற்கு முன்பு 37 இடங்கள் இருந்ததாகவும் தற்போது 43 இடங்கள் இருப்பதாகவும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து மக்களவையில் இரண்டு மசோதாக்களையும் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பண்டிதர்கள் இடம் பெயர்ந்த பொழுது அவர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது, "அப்படி சுமார் 46,631 குடும்பங்களுக்கு இந்த மசோதா உரிமை பெற்று தந்து அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் கடந்த எழுபது வருடங்களாக அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நீதியை அவர்களிடமே வழங்குவதை நோக்கமாகக் கொண்டது" இந்த மசோதா எனவும் கூறினார். 

ஆதாரம்: இந்திய பாதுகாப்பு செய்தி 

Similar News