அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்திற்கு ஒரு கோடி வீட்டிற்கு அழைப்பு!

Update: 2023-12-08 08:39 GMT

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை பிரம்மாண்டமாக கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார். தற்பொழுது இந்த கோவிலின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அன்று ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ்கள் ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் வழங்க உள்ளதாகவும் இந்த பொறுப்பை விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற வி.எச்.பி. அமைப்பு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு என்று ஒரு கோடி வீட்டிற்கு அயோத்தி கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள், பிரமுகர்கள், நடிகர்கள், வீரர்கள் உள்ளிட்ட 7000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கும் பொறுப்பை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை கொண்டுள்ளது. மேலும் கோவில் ட்ரஸ்ட் சார்பில் 50 நாடுகளில் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும், நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்களுக்கும், அதோடு விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது பெற்றவர்கள், ஓய்வு பெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் ஆகியோருக்கு அழைப்புகள் சென்றுள்ளது. 

Source : Dinamalar

Similar News