உலகில் புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்!

Update: 2023-12-09 12:54 GMT

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் குறித்த ஆய்வை ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது அதாவது இந்த ஆய்வின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி 76% ஆதரவை பெற்று உலகின் பிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 

18 சதவீதம் பேர் பிரதமர் மோடியை ஆதரிக்கவில்லை என்றும் 6 சதவீதம் பேர் எந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடியை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோபஸ் ஓப்ராடோ இரண்டாவது இடத்தையும், ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன், கன்னட பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் ரிஷிப் சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு கிடைத்த ஆதரவின் சதவீதத்தையும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஆதாரம்: தினமலர் 

Similar News