இந்திய நாட்டின் நலனிற்கு எதிராக செயல்பட பிரதமர் மோடியை யாராலும் மிரட்ட முடியாது - பிரதமரை புகந்த ரஷ்ய அதிபர்!
அண்மையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யாவின் பொது துறை வங்கியான வி டி பி சார்பில் முதலீட்டாளர்கள் மாநாடு ரஷ்யா அழைக்கிறது என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று கலந்துரையாடினார்.
மேலும் அந்த மாநாட்டில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ரஷ்ய அதிபரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கேள்வியாக இந்திய ரஷ்யாவிற்கு இடையிலான உறவு குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது, அந்த கேள்விக்கு ரஷ்ய அதிபர் புதின், இந்திய நாட்டின் நலனிலும் இந்திய மக்களின் நலனிலும் பிரதமர் நரேந்திர மோடி மிக கவனமாக உள்ளார், இவ்விரண்டு சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது, யாருக்கும் அவர் அஞ்ச மாட்டார்!
கனவில் கூட பிரதமர் மோடியை அச்சுறுத்த முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது என பிரதமர் மோடி இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் கொண்டுள்ள தேசப்பற்றையும் அன்பையும் தெரிவித்தார். மேலும் பேசிய ரஷ்ய அதிபர் உண்மையை கூறப்போனால் தன் நாட்டின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மோடி எடுக்கும் கடினமான முடிவுகளை பார்க்கும் பொழுது வியப்பு அடைகிறேன்!
அதுமட்டுமின்றி ரஷ்யா இந்தியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கண்டு வருகிறது, இவற்றிற்கு பிரதமர் மோடி கடைபிடிக்கும் உறுதியான கொள்கைகளே முக்கிய காரணம் எனவும் பிரதமர் மோடியை பாராட்டி உள்ளார்.
Source : The Hindu Tamilthisai